உலகக் கோப்பைக்குத் தகுதி பெற மலேசியா இலக்கு

top-news

செய்தி – வெற்றி மைந்தன்

கோலாலம்பூர், நவ. 11-

2030ஆம் ஆண்டுக்குள் உலகத்தரம் வாய்ந்த தேசிய கால்பந்து அணியை உருவாக்கி, பிபா உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதற்கு மலேசியா இலக்கு நிர்ணயித்துள்ளது என இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னாயோ தெரிவித்தார். இந்த இலக்கு  மலேசிய கால்பந்து சங்கத்தின் எப் 30  திட்டத்துடன் ஒத்துப்போவதாக அவர் மேலும் சொன்னார். இதன்படி, 2030இல் ஆசியாவின் முதல் ஐந்து நாடுகளில் மலேசியா இடம்பெற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த 12 ஆண்டு திட்டம் மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டம் (2019-2022)  நிர்வாகம், போட்டிகள், மனித வள மேம்பாடு, மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் வலுவான அடித்தளத்தை அமைப்பதற்கு உருவாக்கப்பட்டது. இரண்டாம் கட்டம் (2023-2026) ஆசிய அளவில் முன்னேற்றத்தை அடைவதை இலக்காகக் கொண்டுள்ளது. மூன்றாம் கட்டம் (2027-2030) உலகத்தர கால்பந்து அணியை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

நாடாளுமன்றத்தில் வாய்மொழி கேள்விக்கு பதிலளித்த ஹன்னா, இந்த திட்டம் மலேசிய கால்பந்தை உலக அரங்கில் முன்னிறுத்தும். உள்நாட்டு திறமைகளை வளர்ப்பது, பயிற்சி மையங்களை மேம்படுத்துவது, அனைத்துலக அனுபவத்தை பெறுவது ஆகியவை இத்திட்டத்தில் முக்கிய கூறுகளாக அமைந்துள்ளன என்றார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *