சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 41 வெளிநாட்டினர்கள் கைது!
- THINAGAREN SANGGAREN
- 17 Feb, 2026
பிப்ரவரி 17,
ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 41 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஜொகூர் ஸ்கூடாயில் உள்ள வணிகக் கடையின் மேல் மாடியில் நடத்திய சோதனையில் 26 ஆண்களும் 15 பெண்களும் என மொத்தம் 41 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 41 வெளிநாட்டினர்களிடமும் முறையான பாஸ்போர்ட் இல்லை என்றும் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்து வேலை செய்து வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 41 வெளிநாட்டினர்களும் 16 முதல் 49 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் INDONESIA, MYANMAR நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட கடையின் உரிமையாளர் கடையின் மேல் தலத்தைச் சட்டவிரோதமாகத் தங்கும் விடுதியாக மாற்றி 41 வெளிநாட்டினர்களைத் தங்க வைத்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 41 வெளிநாட்டினர்களையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருவதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



