சின்ன பட்ஜெட் வசூல் பல கோடி-மிரட்டும் திகில் படம்!

top-news
FREE WEBSITE AD

திகில் படங்கள் என்றாலே மக்களின் மத்தியில் ஒரு தனிஈர்ப்பு மற்றும் எதிர்பார்ப்பு இருக்கும். பயம், பரபரப்பு, எதிர்பாராத திருப்பங்கள் என அனைத்தையும் ஒரே நேரத்தில் கொடுக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கும் இந்த வகை படங்களுக்கு எப்போதும் ஒரு நிலையான வரவேற்பு உள்ளது.

அந்த வகையில், தற்போது பரிந்துரை செய்யப்படுவது இந்தத் திரைப்படம் — இது நிச்சயமாக திகிலையும், சுவாரஸ்யத்தையும் திருப்திகரமாக வழங்கும். பயமென்றாலும், திருப்பங்களும், கதையின் இறுதிக்குள் வரும் அதிர்ச்சியும், உங்கள் எதிர்பார்ப்புக்கு மேல் அமையும்.

இந்தப் படம் வெளியாகி கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இது இன்னும் சிறந்த திகில் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.இந்தப் படத்தின் முதல் பாகம் பல கோடியை வசூலித்தது. இரண்டாவது பாகம் இன்னும் கூடுதலாக  வசூலித்து மாபெரும் ஹிட்டடித்தது.

அந்தப் படம் தான் இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'ஸ்திரீ', 'ஸ்திரீ 2'. இந்த இரண்டு பாகங்களும் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. நடிகை ஷ்ரத்தா கபூர் முக்கிய வேடத்தில் நடித்த இந்தப் படத்தில் ராஜ்குமார் ராவ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பங்கஜ் திரிபாதி, அபர்சக்தி குரானா, அபிஷேக் பானர்ஜி போன்ற நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

முழுப் படமும் மிகவும் சுவாரஸ்யமாகவும், அதே சமயம் நகைச்சுவையாகவும் நகரும். திகில், திருப்பங்களுடன் போரடிக்காமல் நகரும் திரைககதை படத்தின் பலம்.இந்தப் படம் நிஜ வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது என கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் கதை மத்தியப் பிரதேசத்தில் உள்ள சந்தேரி என்ற கிராமத்தில் நடக்கிறது. இந்த கிராம மக்கள் ஒரு புராணக்கதையை நம்புகிறார்கள்.அதாவது, அங்கு நான்கு நாட்கள் ஒரு திருவிழா நடத்தப்படுகிறது. அதில் பெண் ஆவி ஆண்கள் தனியாக இருக்கும்போது அவர்களைப் பெயர் சொல்லி அழைக்கிறது. ஆண்கள் யாராவது திரும்பிப் பார்த்தால், அவர்கள் கடத்தப்படுகிறார்கள்.

மறுபுறம், அந்த கிராமத்தில் ஒரு தையல்காரர், ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூரை காதலிக்கிறார். ஷ்ரத்தா கபூர் பண்டிகை காலத்தில் நான்கு நாட்கள் வந்து செல்கிறார்.
அதன் பிறகு, அவர் காணாமல் போகிறார். நீண்ட காலமாக கிராமத்தை ஆட்டிப்படைக்கும் பெண் ஆவி ஷ்ரத்தா கபூர் என்று ராஜ்குமார் ராவ் மற்றும் அவரது நண்பர்கள் நம்புகிறார்கள். இதன் பிறகு என்ன நடந்தது என்பது படத்தின் மீதிக்கதை.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *