பகாவ் 2 இடைநிலைப்பள்ளியில் பொங்கல் விழா!
- Thinagaren Sanggaren
- 01 Feb, 2026
பிப்ரவரி 1,
நெகிரி செம்பிலான் பகாவ் 2 இடைநிலைப்பள்ளி தமிழ்மொழிக் கழகத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா கடந்த 24 ஜனவரி, சனிக்கிழமை பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்ப்பள்ளிகளில் பொங்கல் விழா கொண்டாடப்படுவது போல, இடைநிலைப்பள்ளிகளிலும் பொங்கல் விழாவைச் சிறப்பாக நடத்தியுள்ளனர் பகாவ் இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்கள்
தமிழர் பாரம்பரியமானப் பொங்கல் திருநாளின் முக்கியத்துவத்தை மாணவர்களிடையே எடுத்துரைப்பதோடு, தமிழ்ப் பண்பாடு மற்றும் கலாச்சார விழுமியங்களை வளர்ப்பதே இவ்விழாவின் முக்கிய நோக்கமாகும். இதனை முன்னிட்டு பொங்கல் வைத்தல், கோலப் போட்டி, உறி அடித்தல் உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்பொங்கல் நிகழ்ச்சியில் சுமார் 50 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் கலந்துகொண்டு மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்றனர். விழா சிறப்பாக நிறைவு பெற்றதையடுத்து, இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் செ. முத்துராமன் நிகழ்விற்கு உதவிய அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



