என்னுடைய சொத்துகள் மீது பிரிட்டனில் விசாரணை நடக்கிறதா?
- Muthu Kumar
- 12 Sep, 2025
கோலாலம்பூர், செப். 12-
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவுக்கு பிரிட்டனில் உள்ள சொத்துகள் பற்றி மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரணை நடத்தி வருவதாக அந்த ஆணையத்தின் தலைவர் அஸாம் பாக்கி
குறிப்பிட்டுள்ளார். அவரின் அக்கூற்று நகைப்புக்குரிய ஒன்றாக உள்ளது என்று மகாதீர் பதிலடி கொடுத்துள்ளார்.
அப்படிப்பட்ட சொத்துகள் இருப்பது எனக்குத் தெரியாது. அது பற்றிய விவரங்களை அஸாம் எனக்குத் தெரிவித்தால் நன்றாக இருக்கும் என்று வஞ்சப் புகழ்ச்சியுடன் மகாதீர் குறிப்பிட்டார்.அச்சொத்துகள் பற்றிய விவரங்களை என்னிடம் தெரிவித்தால், அவற்றை எனக்குச் சொந்தமாக்கி விடுவேன். அதன் பிறகு. அச்சொத்துகளை விற்று அதில் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்கு நன்கொடை அளிப்பேன் என்றார் அவர்.
எம்ஏசிசியின் அந்த விசாரணையானது அரசியல் நோக்கம் கொண்டது என்றும் நூறு வயதான மகாதீர் சாடினார்.பிரிட்டனில் மகாதீருக்குச் சொந்தமாக உள்ள சொத்துகள் மீது தற்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் அஸாம் கூறியிருந்தார்.சொத்துப் பிரகடனம் குறித்து எம்ஏசிசியினால் விசாரிக்கப்படும் நபர்களில் மகாதீரும் அடங்குவார் என்று கடந்தாண்டு ஏப்ரலில் அஸாம் கூறியிருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



