கேளிக்கை மையத்தில் 17 உயர்மட்ட அரசு அதிகாரிகளுடன் 201 பேர் கைது!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 29,

கேளிக்கை மையத்தில் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்ட ஒரு கும்பலைக் கோலாலம்பூர் காவல்துறை கைது செய்த போது அரசு துறைகளில் உயர்மட்ட பதவிகளில் இருக்கும் 17 அரசு தலைமை அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று தலைநகர் Chow Kit சாலையில் உள்ள வணிக வளாகத்தில் சோதனையை மேற்கொண்டதில் மொத்தம் 201 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கோலாலம்பூர் காவல்துறைத் துணைத் தலைவர் Datuk Mohd. Azani Omar தெரிவித்தார். கேளிக்கை மையம் எனும் போர்வையில் பாலியல் தொழிலுக்காகத் தலமாக இந்த வணிகத் தலம் கடந்த 10 மாதங்களாகச் செயல்பட்டு வந்ததாக Datuk Mohd. Azani Omar தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட 17 அரசு அதிகாரிகளும் அமைச்சரவை அதிகாரிகள், ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள், துணை அரசு வழக்கறிஞர்கள், என அடையாளம் காணப்பட்டுள்ளது. இருண்ட அறையில் வெள்ளை துண்டுகளை மட்டும் அணிந்தபடி பாலியல் தொழிலாளர்களுடன் அவர்கள் உல்லாசமாக இருக்கும்படியானப் புகைப்படங்களும் காணொலிகளும் அந்த கேளிக்கை மையத்தில் திரையிடப்பட்டிருப்பதாகவும் கைது செய்யப்பட்ட அனைவரும் 19 முதல் 60 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் கோலாலம்பூர் காவல்துறைத் துணைத் தலைவர் Datuk Mohd. Azani Omar தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *