எஸ்.பி.எம் 2025 தேர்வு தொடக்கம்! வெள்ள பாதிப்பு மாநிலங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள்

top-news

செய்தி - வெற்றி மைந்தன்

புத்ராஜயா, நவ. 25-

எஸ்.பி.எம் 2025 தேர்வு இன்று (நவம்பர் 25) நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. கல்வி அமைச்சு (KPM) மேற்கொண்ட பல்வேறு தயாரிப்பு நடவடிக்கைக்களுக்குப் பிறகு, வெள்ளம் பாதித்த மாநிலங்களிலும் தேர்வு சீராக நடைபெறுவதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஆஜம் அகமது கூறுகையில், 413,372 மாணவர்கள் இன்று மலாய் மொழி தாள் 1, 2 எழுதத் தொடங்கியுள்ளனர் என்றார். இது 3,350 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.

எஸ்.பி.எம் 2025 எழுத்துத் தேர்வு இன்று தொடங்கியுள்ளது. நாங்கள் பழைய அட்டவணையின்படி – ஆண்டு இறுதியில் – தேர்வை நடத்துகிறோம், இருந்தபோதிலும் மழை காலத்தில் இருக்கிறோம். கல்வி அமைச்சு, அனைத்து மாணவர்களும் தடையின்றி தேர்வு எழுதுவதை உறுதிப்படுத்த, விரிவான அவசரத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

எஸ்பிஎம் 2025, நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *