மலாக்காவில் SPM மாணவர்களுக்குச் சிறப்பு வழிபாடு!
- Tamil Malar (Reporter)
- 11 Nov, 2025
செய்தி: சங்கர் வேலு
மலாக்கா நவ 11 -
சிலாண்டார் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் மலாக்காவில் உள்ள சிலாண்டார் மாவட்டத்தில் SPM தேர்வு எழுதும் மாணவர்களுக்கானச் சிறப்பு வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. சிலாண்டார் வட்டாரத்தில் உள்ள மாணவர்கள் SPM தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த சிறப்பு வழிபாட்டை ஏற்பாடு செய்ததாக ஆசிரியர் திருவகுமார் ஆறுமுகம் தெரிவித்தார்.
சிலாண்டார் வட்டாரத்தில் உள்ள
ஆரம்ப்பள்ளி, தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மாணவர்கள், பெற்றோர்களுடன்
பொது மக்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் இச்சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றதாகவும் மலாக்கா ஸ்ரீ
இராம கிருஷ்ண ஆசிரமத்தின் கூட்டுப் பிராத்தனையுடன் சொற்பொழிவும் நடைபெற்றதாகவும் ஜாசின்
வட்டார இந்து சங்கம், சிலாண்டார் தமிழ் இளைஞர் மணி மன்றம்,
ஆலய நிர்வாகம் ஆகியோரின் ஆதரவில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்ததாக
ஆசிரியர் திருவகுமார் ஆறுமுகம் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



