சபா தேர்தலுக்கான நாள் விரைவில் அறிவிக்கப்படும்! தேர்தல் ஆணையம்!
- Thinagaren Sanggaren
- 06 Oct, 2025
அக்தோபர் 6,
இன்று நண்பகல் சபா மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து சபா மாநிலத்தின் 17 ஆவது சட்டமன்றத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அதன் தலைமை அதிகாரிகளுடன் சிறப்புச் சந்திப்புக் கூட்டம் நடத்தும் என தேர்தல் ஆணையர் Datuk Seri Ramlan Harun தெரிவித்தார். சபா ஆளுநரின் ஆலோசனையின்படி சபா மாநில முதலமைச்சர் ஹஜிஜி இன்று நண்பகல் மாநில அரசைக் கலைப்பதாகத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்ததை அடுத்து தேர்தலுக்கான முன்நடவடிக்கைகளை மேற்கொள்வதாக Datuk Seri Ramlan Harun தெரிவித்தார்.
தேர்தல்
குறித்தான விவரங்கள் சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாக
Datuk Seri Ramlan Harun தெரிவித்தார். மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட 60 நாள்களுக்குள் தேர்தல்
நடத்தப்படும் என்கிற சட்டவிதியின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் விரைந்து தேர்தல் ஆணையத்தின்
தலைமை அதிகாரிகளுடன் சந்திப்பை நடத்துவதாக இன்று தேர்தல் ஆணையர் Datuk Seri
Ramlan Harun வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



