பழைய ஊழல் வழக்காக இருந்தாலும் சொத்துகளைப் பறிமுதல் செய்வோம்! – SPRM

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 1,

ஊழலில் தொடர்புடைய சொத்துகளைப் பறிமுதல் செய்வதில் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் கால நேரங்கள் பார்ப்பதில்லை என அதன் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார். 50 ஆண்டுகளுக்கு முன்னதாக நடந்த ஊழலையும் நாங்கள் விசாரித்து வருகிறோம். அதன் சொத்துகள் பறிமுதல் செய்யப்படவுள்ளது. அப்படியானால் கடந்த காலங்களில் செய்த ஊழல்கள் காலம் கடந்து விட்டதால் யாருக்கும் தெரியாது என நினைக்க வேண்டாம் என லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார். 

கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் 29 வரையில் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் RM6.81 பில்லியன் மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்திருப்பதாக SPRM தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki சுட்டிக்காட்டினார். நாட்டிற்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திய 1MDB வழக்கில் தொடர்புடைய RM12 பில்லியன் மதிப்பிலான சொத்துகள் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய பல்வேறு நாடுகளுடன் SPRM இணைந்து செயல்பட்டு வருவதாகவும் SPRM தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார். இந்த ஊழல் வழக்குகள் எப்போது நிகழ்ந்தாலும் தகுந்த ஆதாரத்திற்காக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் காத்திருந்து நடவடிக்கை எடுக்கும் என SPRM தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki நம்பிக்கை அளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *