SPRM துன் டைம்மை பழிவாங்குகிறது! மகாதீர் காட்டம்!

top-news

ஜூலை 1,


முன்னாள் நிதியமைச்சரும் தொழிலதிபருமான Tun Daim Zainuddinக்குச் சொந்தமான RM 400 கோடி ரிங்கிட் மதிப்பிலான வெளிநாட்டுச் சொத்துகளை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் பறிமுத செய்ய நினைப்பது அநாகரிகமானது என முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad தெரிவித்துள்ளார். உண்மையில் இந்த SPRM பழிவாங்க நினைப்பதாகவும் அவர்களிடம் அப்படி என்ன ஆதாரம் இருக்கிறதென மகாதீர் கேள்வி எழுப்பினார். ஒவ்வொரு தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி மாறும் போது முந்தைய ஆட்சியில் இருந்தவர்கள் மீது முதலில் ஏவப்படுவது லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமாகவே இருப்பதாக மகாதீர் குற்றம் சாட்டினார். 

உண்மையில் நான் பிரதமராக இருந்த போது முதலில் கேட்பது ஆதாரம். நம்பகமான ஆதாரமாக இருந்தால் மட்டுமே லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என மகாதீர் நினைவூட்டினார். Tun Daim Zainuddin நிதியமைச்சராகும் முன்னரே பெரும் செல்வந்தர் என்பதை நாடே அறியும். அவர் Tun Daim Zainuddin திருடினாரா? கொள்ளையடித்தாரா? அவர் திருட வேண்டும் என நினைத்திருந்தால் 1984 முதல் 1991 வரையில் நிதியமைச்சராக இருந்த போதே அவர் தாராளமாகக் கொள்ளையடித்திருக்கலாம் என மகாதீர் சுட்டிக்காட்டினார்.


Tun Dr Mahathir Mohamad mendakwa tindakan SPRM menyita aset luar negara Tun Daim Zainuddin bernilai RM400 juta adalah bermotifkan dendam politik. Beliau menegaskan semasa beliau menjadi Perdana Menteri, SPRM hanya bertindak berdasarkan bukti yang kukuh.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *