ஊழல் வழக்கில் ஹம்சா சைனுதீனின் உதவியாளரிடம் SPRM விசாரணை!
- Thinagaren Sanggaren
- 09 Aug, 2025
ஆகஸ்ட் 9,
எதிர்க்கட்சித் தலைவரான Datuk Seri Hamzah Zainudin உள்துறை அமைச்சராகப் பதவியிலிருந்த போது ஊழலில் ஈடுப்பட்டதாக நம்பப்படும் அவரின் அரசியல் செயலாளர் வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்றும் கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020 டிசம்பரில் உள்துறை அமைச்சராக இருந்த Datuk Seri Hamzah Zainudin-இன் அரசியல் செயலாளராகப் பொறுப்பிலிருந்த Sayed Amir Muzzakkir ஊழலில் ஈடுப்பட்டதாகவும் அரசு குத்தகைகள் தொடர்பாக RM350,000 லஞ்சம் கேட்டுப் பெற்றதற்காகவும் எதிர்வரும் ஆகஸ்ட் 25 விசாரணைக்கு ஷா அலாம் நீதிமன்றத்தில் ஆஜராகும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Sayed Amir Muzzakkir அப்போதைய உள்துறை அமைச்சரான Datuk
Seri Hamzah Zainudin-இன் செயலாளராக இருந்த போது RMPNet எனும் அரசு மலேசியக் காவல்துறையின் மென்பொருள் மேம்பாடு தொடர்பான RM
381 மில்லியன் மதிப்பிலான பராமரிப்புக் குத்தகையைக்
குறிப்பிட்ட நிறுவனத்திற்கு வழங்குவதாக நம்பிக்கை அளித்ததாகவும் சம்மந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து
2020 டிசம்பர் 4 ஆம் நாள் RM350,000
ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றதாகவும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் தெரிய
வந்துள்ளது. குத்தகை விண்ணப்பத்தில் ஈடுபட்டிருந்த மற்றொரு நிறுவனம் குத்தகையை வழங்குவதில்
முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக
லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் அளித்த நிலையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருவதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



