அன்வார் ஆட்சியில் SPRM துணிந்து செயல்படுகிறது! அன்வாருக்கு ஆதரவு!

top-news

ஜூலை 5,


அன்வார் பிரதமராகியது லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் முன்பை விடவும் இப்போது துணிந்து செயல்படுகிறது என்றும் பெரும் ஊழல்வாதிகளை SPRM தொடர்ந்து விசாரித்து வருகிறது என்றும் அமானா கட்சியின் உதவித் தலைவர் Datuk Mahfuz Omar தெரிவித்தார். அன்வார் பிரதமராகும் முன்னர் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் ஊழல் வழக்குகளை விரைவாகவும் துணிந்தும் விசாரிக்கும், ஆனால் தங்களை VVIP எனும்படி காட்டிக் கொள்ளும் TAN SRI, DATUK SERI, TUN, DATUK என்பவர்களை விசாரணைக்கு அழைக்காது. அப்படியே அவர்கள் மீது விசாரணையை மேற்கொண்டாலும் விசாரிப்பதற்கு முன்னமே அரசியல்வாதிகளால் SPRM கைகள் கட்டப்படும் என்றும் விசாரணைக்குப் பின்னர் TAN SRI, DATUK SERI, TUN, DATUK போன்றவர்கள் சாவகாசமாக வெளியேறுவார்கள் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான Datuk Mahfuz Omar தெரிவித்தார்.

ஆனால் இப்போது லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் துணிந்து விசாரணையை மேற்கொள்கிறது. SPRM நடத்தும் விசாரணையை முழுமையாகக் கையாளுகிறது. தெரிந்தும் தெரியாமலும் ஊழலில் ஈடுபடும் சாதாரணமானவர்கள் மீது நடத்தப்படும் அதே விசாரணையின் முறைமை போலவே TAN SRI, DATUK SERI, TUN, DATUK போன்றவர்களிடமும் SPRM விசாரணை நடத்துகிறது. அன்வாரின் தலைமைத்துவத்தில் SPRM முன்பை விடவும் துணிந்து நம்பிக்கையுடன் செயல்படுவதை மக்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டுமென Datuk Mahfuz Omar தெரிவித்தார்.


Datuk Mahfuz Omar menyatakan di bawah pimpinan Anwar Ibrahim, SPRM kini lebih berani menyiasat kes rasuah tanpa mengira status VVIP seperti Tan Sri atau Datuk Seri. Beliau yakin rakyat sedar SPRM kini lebih bebas bertindak berbanding sebelum ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *