SPRM வரலாற்றில் கரும்புள்ளி! என்னை மன்னியுங்கள்! – AZAM BAKI மன்னிப்பு!
- Thinagaren Sanggaren
- 17 Jul, 2025
ஜூலை 17,
லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki வெளிப்படையாக மன்னிக்கோரியுள்ளார். SPRM விசாரணையின் போது சிலாங்கூர் SPRM அலுவலகத்தின் 14 ஆவது மாடியிலிருந்து விழுந்து இறந்த Teoh Beng Hock குறித்து எந்தவொரு கருத்தும் தாம் தெரிவிக்க முடியாது என்பதாலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதே வேளையில் Teoh Beng Hock இறப்பு என்பது SPRM வரலாற்றின் கரும்புள்ளி என்றும் அதனை இலகுவாகக் கடந்து விட முடியாது என்றும் அவரின் குடும்பத்தினரிடம் தாம் மனமார மன்னிப்புக் கேட்பதாகவும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார்.
2009 ஜூலை 16 SPRM விசாரணையின் போது அவர் 14 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்தார் என்பதை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் உறுதிப்படுத்தினாலும் அவரின் மரணத்தில் அதிகாரிகள் சம்மந்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படும் கருத்துகளில் உண்மையில்லை என்பதையும் Tan Sri Azam Baki உறுதியாகத் தெரிவித்தார். Teoh Beng Hock அப்போதைய சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரான EAN YONG HIAN WAN இன் செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணையின் போது அப்போதைய KINRARA சட்டமன்ற உறுப்பினரான TERESA KOK, SUBANG சட்டமன்ற உறுப்பினரான HANNAH YEOH, BUKIT LANJAN சட்டமன்ற உறுப்பினரான ELIZABETH WONG, DAMANSARA UTAMA சட்டமன்ற உறுப்பினரான CHEAH WING YIN, BUKIT GASING சட்டமன்ற உறுப்பினரான Edward lee என 5 சட்டமன்ற உறுப்பினர்கள் விசாரணைக்குப் பின்னர் வீடு திரும்பிய நிலையில் Teoh Beng Hock அலுவலகத்தின் 14 ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



