கழிப்பறையில் 1 மில்லியன் பணத்தை எரித்த ஊழல்வாதிகள்! - SPRM

top-news
FREE WEBSITE AD

ஜூலை 19, 

லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் சோதனையின் போது கணக்கில் வராத பணக் கட்டுகளைக் கழிப்பறையில் எரித்த நிறுவன உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. கட்டுமானத் திட்டத்தின் நிதியில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு வீட்டைச் சோதனையிட்ட போது வீட்டிலிருந்து புகை கிளம்பியதாகவும் வீட்டின் கழிப்பறையில் 100 ரிங்கிட் நோட்டுகள் எரியூட்டப்பட்டதைக் கண்டறிந்ததாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Datuk Seri Ahmad Khusairi Yahaya தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட வீட்டிலிருந்து 1 மில்லியன் மதிப்பிலான ரொக்கம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டிருப்பதாகவும் 7.5 மில்லியன் மதிப்பிலான வெளிநாட்டு ரொக்கப் பணமும், தங்க நாணயங்கள், தங்க நகைகள் உட்பட 3 உயர் தர Rolex, Omega, Cartier ரக கைகடிகாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நிதி முறைகேடுகள் குறித்தான மேல் விசாரணைக்காகச் சம்மந்தப்பட்ட நிறுவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்திருப்பதாகவும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Datuk Seri Ahmad Khusairi Yahaya தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *