மீண்டும் ISMAIL SABRI மீது SPRM விசாரணை! - Tan Sri Azam Baki

top-news

ஏப்ரல் 22,

முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob மீது லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM நாளை மறுநாள் வியாழக் கிழமை காலை மீண்டும் விசாரணை நடத்தும் என SPRM தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki இன்று தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் ஊழல் வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளாரா என்பதற்கான விசாரணை என்றும் இப்போது Datuk Seri Ismail Sabri Yaakob சொத்துக் குவிப்பு வழக்குக்காக விசாரிக்கப்படவிருப்பதாகவும் Tan Sri Azam Baki தெரிவித்தார்.

கடந்த மார்ச் 24 ஆம் நாள் விசாரணையில் பெறப்பட்ட வாக்குமூலத்தின் தொடர்ச்சியாக வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துகளைச் சேர்த்துள்ளதாக SPRM விசாரணைக் குழு சந்தேகிப்பதால் இந்த விசாரணை வியாழக் கிழமை நடத்தப்படுவதாக Tan Sri Azam Baki தெரிவித்தார். கடந்த மார்ச் 3 170 மில்லியன் மதிப்பிலான ரொக்கமும் நகையும் தலைநகரில் உள்ள ஒரு வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டிந்த நிலையில் இந்த விசாரணை தொடர்வதாக SPRM தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki விளக்கமளித்தார்.

SPRM akan menjalankan siasatan lanjut terhadap bekas Perdana Menteri Ismail Sabri berhubung kes pengumpulan aset melebihi pendapatan. Siasatan ini susulan penemuan wang tunai dan barang kemas bernilai RM170 juta pada Mac lalu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *