ISMAIL SABRI மருமகனையும் SPRM விசாருக்கும்! – AZAM BAKI

top-news

மே 26,

முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob சம்மந்தப்பட்ட சொத்துக்குவிப்பு பணமோசடி வழக்கின் விசாரணையில் அவரின் மருமகனையும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM விசாரிக்கும் என அதன் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki இன்று தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 2022 வரையிலானக் காலத்தில் இந்த பணமோசடிகள் நிகழ்ந்திருப்பதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் சந்தேகிப்பதால் அதே காலக்கட்டத்தில் முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob தனது மருமகன் Datuk Jovian Mandagie உடன் வழக்கமானச் சந்திப்பைக் காட்டிலும் அதிகமாகச் சந்தித்ததன் அடிப்படையில் Datuk Jovian Mandagie உட்பட ஒரு சிலரையும் விசாரிக்கவிருப்பதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார். 

இந்தோனேசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட Datuk Jovian Mandagie தற்போது பிரபல CHEETAH நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பதாகவும் ராயா ஹஜிக்குப் பின்னர் அவர் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு நேரில் வந்து விசாரணைக்கு ஒத்துழைப்பார் என்றும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார். முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob மகளான NINA SABRINAவின் முன்னாள் கணவரான Datuk Jovian Mandagie முன்னதாக TV3, ASTRO RIA ஊடகங்களில் பணியாற்றியவர் என்பதும் கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்மாயில் சப்ரியின் மகளான நீனா சப்ரீனாவுடன் விவாகரத்துப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

SPRM akan menyiasat Datuk Jovian Mandagie, bekas menantu Ismail Sabri berhubung kes pengumpulan kekayaan secara meragukan dari 2021 hingga 2022. Jovian dijangka hadir memberi kerjasama selepas Aidiladha kata Ketua Pesuruhjaya SPRM, Tan Sri Azam Baki.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *