RM 247 மில்லியன் மதிப்பிலான டீசல் கடத்தலில் 2 டத்தோக்கள் கைது! – SPRM அதிரடி!
- Thinagaren Sanggaren
- 22 Sep, 2025
செப்டம்பர் 22,
டீசல் கடத்தலை முறியடிக்க மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 2 டத்தோக்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 6 பேரிடமிருந்து பல்வேறு வகையிலான ஆடம்பரப் பொருள்கள் உட்பட உள்ளூர் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக Tan Sri Azam Baki தெரிவித்தார். லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் OPS KAREN எனும் சிறப்புச் சோதனை நடவடிக்கையில் சபா, சரவாக் மாநிலங்களில் சட்டவிரோதமாக டீசல் எரிவாயுகள் கடத்தப்படுவதைக் கண்டறிந்ததும் பின்னணியில் இயங்கிய 2 டத்தோக்களையும் அவர்கள் நண்பர்களையும் SPRM கைது செய்துள்ளதாக Tan Sri Azam Baki இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.
இந்த கும்பலால் கடத்தப்பட்ட டீசலால் அரசுக்கு RM 247 மில்லியன் மதிப்பிலான வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் Tan Sri Azam Baki தெரிவித்தார். சம்மந்தப்பட்ட நிறுவனம் அரசு உரிமம் பெற்ற டீசல் விற்பனை நிறுவனமாகக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்த நிலையில் டீசல் சுத்திகரிப்பு நிறுவனத்தின் மூலமாகப் பெறப்படும் டீசலைப் பதுக்கி, அதன் விலை உயரும் போது டீசலை விற்பனைக்குக் கொண்டு வந்து அதிக லாபம் பெற்று வருவதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அரசாங்கத்தின் டீசல் குத்தகைகளைக் குறைவான லாபத்திற்குப் பெற்று அதனை அதிக லாபத்தில் இது மாதிரியான நிறுவனங்களை அடையாளம் காண லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் OPS KAREN எனும் சிறப்புச் சோதனை நடவடிக்கையின் விசாரணையைக் கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொண்டு வருவதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



