நிதி மேலாண்மை வெளிப்படைத்தன்மைக்கு SPRM நான்கு பரிந்துரைகள்
- Surendran Sumdraraj
- 14 Mar, 2026
புத்ராஜெயா, மார்ச் 14-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM), மலேசிய சுங்கத் துறை மூத்த அதிகாரிகள் சங்கமான PERKASA-க்கு நிதி மற்றும் மேலாண்மையை வலுப்படுத்தும் நோக்கில் நான்கு நிர்வாக மேம்பாட்டு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
SPRM வெளியிட்ட அறிக்கையில், PERKASA நிதி உதவி கோரும் போது, மலேசிய அரச சுங்கத் துறை (JKDM) உடன் நேரடி அதிகாரப்பூர்வ தொடர்பு கொண்ட நிறுவனங்களை அணுகக்கூடாது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிப்புற நிதி உதவியுடன் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் அனைத்தும் அனைவரையும் உள்ளடக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும், அதன் பயன் மூத்த அதிகாரிகளுக்கு மட்டும் அல்லாமல் பொதுமக்கள் மற்றும் சமூகத்திற்கும் கிடைக்க வேண்டும் என்றும் SPRM குறிப்பிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, PERKASA-க்கு வழங்கப்படும் எந்தவொரு நிதி உதவியும் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படுவதற்கு முன், JKDM தலைமை இயக்குநரின் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் மூலம் நிர்வாகத் தெளிவுத்தன்மையை அதிகரித்து, நிதி மேலாண்மையில் ஏற்படக்கூடிய தவறுகள் மற்றும் ஊழல் சம்பவங்களைத் தடுப்பதே SPRM-ன் முக்கிய நோக்கமாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



