5 மில்லியன் லஞ்சம் – இரண்டு விரிவுரையாளர்கள் உட்பட நால்வர் கைது
- Surendran Sumdraraj
- 08 Apr, 2026
கோலாலம்பூர், ஏப். 8-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM), வடக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் உயர்கல்வி நிறுவனத்தைச் (IPTS) சேர்ந்த இரண்டு விரிவுரையாளர்கள் உட்பட நான்கு பேரை, சுமார் 5 மில்லியன் லஞ்சம் கோரி பெற்றதாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளது.
இந்த கைது நடவடிக்கை நேற்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை பேராக் மாநில SPRM அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில், ஒரு எண்ணெய் நிறுவன அதிகாரியும், ஒரு பொறியியல் நிறுவன இயக்குநரும் அடங்குகின்றனர். இவர்கள் அனைவரும் சுமார் 40 வயதிற்குள் உள்ளவர்கள் எனத் தகவல் தெரிவிக்கிறது.
மூல தகவல்களின் படி, இந்த லஞ்சத் தொகை பல நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி திட்டங்களைப் பெற்றுத் தரும் நோக்கில் பெறப்பட்டதாக நம்பப்படுகிறது.
ஆரம்பக் கட்ட விசாரணையில், இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் 2019 முதல் 2025 வரை நடைபெற்றதாகத் தெரியவந்துள்ளது. இதில், அந்த நிறுவன அதிகாரியும் இயக்குநரும், இரு விரிவுரையாளர்களுக்குப் பதிலாக லஞ்சத் தொகையைப் பெறும் இடைதரகர்களாகச் செயல்பட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



