மலேசியர் உட்பட 8 பேரை இஸ்ரேல் கைது செய்தது! எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்! – மலேசிய நடிகை பதிவு
- Shan Siva
- 02 Oct, 2025
கோலாலம்பூர், அக் 2: மத்தியதரைக் கடலில் இஸ்ரேலிய கடற்படையால் குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா (GSF) இன் பல மனிதாபிமான பணிக் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்ட பின்னர் எட்டு ஆர்வலர்கள், இஸ்ரேலியப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்டவர்களில் மலேசிய
ஆர்வலர் ஜிசி கிரானாவும் ஒருவர் என்று பெர்னாமா தெரிவித்துள்ளது. மனித உரிமை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க்கும் தடுத்து வைக்கப்பட்டார்.
இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் இன்று காலை ஒரு அறிக்கையில் பல GSF கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு
அவற்றின் பயணிகள் இஸ்ரேலில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதை
உறுதிப்படுத்தியது.
துன்பெர்க் மற்றும் பல தடுத்து வைக்கப்பட்டுள்ள GSF பங்கேற்பாளர்கள் பாதுகாப்பான நிலையில் இருப்பது போன்ற
வீடியோ கிளிப்பையும் பதிவேற்றியது.
GSF கப்பல்களில் மொத்தம்
17 மலேசியர்கள் சிப்பாங்கில் உள்ள சுமுத் நுசந்தரா கட்டளை மையத்துடனான (SNCC) தொடர்பை இழந்துள்ளனர்.
SNCC உடனான தொடர்பு
துண்டிக்கப்படுவதற்கு முன்பு, கப்பல்களின் வானொலி அமைப்பை இடைமறித்து, GSF பங்கேற்பாளர்களிடம் இஸ்ரேலியப் படைகள் "சிறையில்
சந்திப்போம்" என்று கூறியதாகக் கூறப்படுகிறது.
மலேசிய நடிகையும் ஆர்வலருமான ஆர்டெல் ஆர்யனா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு 9
மணி முதல் காசா நேரப்படி இணையத்தைத் தடுத்து, தகவல் தொடர்புகளைத் துண்டித்ததாகவும், தாம் பயணிக்கும் கப்பல் மிக்கேனோ, R3 சிவப்பு மண்டலத்திற்குள் நுழைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நான் எனது தொலைபேசியை மறைக்க முயற்சிக்கிறேன். இஸ்ரேலியப் படைகள் எங்கள்
அனைத்து இணைய இணைப்புகளையும் துண்டித்து வருகின்றன... நாங்கள் ஆஃப்லைனில் இணைக்க
முயற்சிக்கிறோம். மீண்டும் நேரலைக்குச் செல்லும் வாய்ப்புக்காக நான்
காத்திருக்கிறேன். எங்களுக்காகவும் எங்கள் நண்பர்களுக்காகவும் பிரார்த்தனை
செய்யுங்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
SNCC முன்னர் மூன்று GSF கப்பல்களான அல்மா, சிரியஸ் மற்றும் அதாரா ஆகியவை
இஸ்ரேலிய கடற்படைகளால் முற்றுகையிடப்பட்டதை உறுதிப்படுத்தியது. மொத்தம் எட்டு உயர்
எச்சரிக்கை அவசர சமிக்ஞைகள் செயல்படுத்தப்பட்டதாகக் கூறியது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



