பாலஸ்தீன மக்களுக்கான உதவிகளை தடுக்கும் இஸ்ரேலின் நடவடிக்கை ஏற்றுக் கொள்ள முடியாதது!
- Muthu Kumar
- 26 Sep, 2025
புத்ராஜெயா, செப். 26-
பாலஸ்தீன மக்களுக்கான உதவிகளை தடுக்கும் இஸ்ரேலின் நடவடிக்கை ஏற்றுக் கொள்ள முடியாதது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளில் அனைத்துலகப் பணியான குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எப்) மேற்கொண்டு வருகிறது.
இந்த உதவிகளை ஜிஎஸ்எப் காஸாவிற்கு கொண்டு செல்வதை தடுக்கும் இஸ்ரேலின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது.
மேலும் இந்த உதவி காஸாவில் உள்ள மக்களைச் சென்றடையும் என்ற நம்பிக்கையில் ஜிஎஸ்எப்-க்கு தாம் முழு ஆதரவை வழங்குவதாக கூறினார். இஸ்ரேலின் தொடர்ச்சியான குற்றங்களுக்கு நான் மிகவும் வருந்துகிறேன்.
மேலும் இது ஓர் உண்மையான மனிதாபிமான முயற்சி என்பதால் நாங்கள் அக்கடற்படையை ஆதரித்துள்ளோம்.பசி, துன்பத்தில் இருப்பவர்களுக்கு மருந்து, குழந்தைகளுக்கு உணவு வழங்குவதைத் தடுப்பது சரியா? ஆக இந்த மனிதாபிமான உதவிகளை தடுக்கும் நடவடிக்கைகளை இஸ்ரேல் கைவிட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



