பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் சட்டவிரோதக் குடியேற்றம்! - மலேசியா கண்டனம்
- Shan Siva
- 11 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 11: ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் 34 புதிய சட்டவிரோதக் குடியேற்றங்களைக் கட்டுவதற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்த முடிவை மலேசியா வன்மையாகக் கண்டித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் வெளியுறவு அமைச்சு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தொடர்புடைய தீர்மானங்களை இஸ்ரேல் மீறுவதாக மலேசியா வலியுறுத்துவதாகக் கூறியுள்ளது.
இது பாலஸ்தீனப் பிரதேசத்தின் மக்கள்தொகை அமைப்பை மாற்றும் ஒரு முயற்சியையும் பிரதிபலிக்கிறது என்று அந்த அமைச்சகம் கூறியது.
பொறுப்பேற்பை உறுதி செய்வதற்கும், சர்வதேசச் சட்டத்திற்கு இணங்குவதைக் கட்டாயப்படுத்துவதற்கும் உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச சமூகத்தையும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையையும் மலேசியா வலியுறுத்துகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1967-க்கு முந்தைய எல்லைகளின் அடிப்படையில், கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசை நிறுவுவது உட்பட, பாலஸ்தீன மக்களின் பிரிக்க முடியாத உரிமைகளுக்கான தனது கொள்கை ரீதியான ஆதரவை மலேசியா மீண்டும் உறுதிப்படுத்துவதாக எ விஸ்மா புத்ரா கூறியது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



