ஈரான் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்தும் இஸ்ரேல் - எல்லையில் ரெடியான படைகள்!

top-news
FREE WEBSITE AD

இஸ்ரேல் ஈரான் போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் இரண்டு தரப்பிற்கும் இடையில் மோதல் நடந்தது.இப்போது மீண்டும் இந்த மோதல் தீவிரம் அடையும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதில் அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

இஸ்ரேலிய ஊடக தகவல்களின்படி, பிரதமர் நெதன்யாகு தனது அமைச்சர்களிடம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஹெஸ்பொல்லா மீதான தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, நெதன்யாகு ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த இன்னும் சில மணிநேரங்களே எஞ்சியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஆயுத்த பணிகள் நடப்பதாக கூறப்படுகிறது.

ஈரான் நாட்டில் உள்நாட்டு கலவரத்தை ஏற்படுத்தி,அந்நாட்டு அரசை கவிழ்க்க இஸ்ரேல் - அமெரிக்கா முயன்றது. ஆனால் அது நடக்கவில்லை. இந்த நிலையில்தான் ஈரான் மீது இஸ்ரேல் நேரடியாக ராணுவ தாக்குதல்களை நடத்தலாம் என்று கூறப்படுகிறது. ஈரானில் ஏற்கனவே அரசுக்கு எதிராக உள்நாட்டு போராட்டங்கள் தீவிரம் அடைந்து உள்ளன.

இதனால் அங்கே ஆட்சியே கவிழும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரான் மீது இஸ்ரேல் அணு ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஈரானில் உள்நாட்டுப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாடு தனது பாதுகாப்புக்கு உடனடி அச்சுறுத்தல் ஏற்பட்டால், எதிரிகள் மீது முன்கூட்டியே தாக்குதல் நடத்தக்கூடும் என பாதுகாப்பு மன்றம் எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் இஸ்ரேலுடனான போருக்குப் பிறகு ஈரானின் தற்காப்பு வியூகத்தை வகுப்பதற்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு மன்றம் நேற்று இது தொடர்பான முடிவுகளை எடுத்தது.

செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், முன்னெச்சரிக்கை ராணுவ நடவடிக்கைக்குக் கதவைத் திறந்து விட்டுள்ளது. இந்த அறிக்கை, "ஈரானின் பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவை மீற முடியாத சிவப்பு கோடு ஆகும். எந்தவொரு ஆக்கிரமிப்பும் அல்லது விரோதப் போக்கின் தொடர்ச்சியும் கடுமையான மற்றும் தீர்க்கமான பதிலைப் பெரும்" என்று தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இரண்டு தரப்பிற்கும் இடையில் மோதல் நடந்தது. கடந்த முறை நடத்தப்பட்டது தாக்குதலிலேயே ஈரானின் அணு மையங்களை இஸ்ரேல் குறி வைத்தது. அதன் ஒரு கட்டமாக கடந்த சில வாரங்களுக்கு முன் ஈரான் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தியது. போர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு அமைப்புகள் தாக்கப்பட்டு உள்ளன. போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது.

அமெரிக்கா 3-4 B-2 stealth bombers விமானங்களை ஈரான் நோக்கி அனுப்பியது. குண்டுகளுடன் சென்ற இந்த விமானம் நடுவழியில் எரிபொருள் நிரப்பியது. அப்போதே இரவு தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதிக எடை கொண்ட குண்டுகளை ஏற்றி சென்றதால், இந்த விமானங்கள் குறைந்த எரிபொருளுடன் டேக் ஆப் செய்தது. இதனால் நடுவழியில்தான் கூடுதல் எரிபொருள் நிரப்பப்பட்டது. அப்போதே தாக்குதல் நடத்த போவது உறுதியானது. இந்த நிலையில்தான் அமெரிக்கா ஈரான் அணு உலை மற்றும் ஆராய்ச்சி அமைப்புகள் மீது வான்வழித் தாக்குதல்களைத் நடத்தி உள்ளது. ஈரானின் அணுசக்தியை முடக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல்கள், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை உள்கட்டமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்டு உள்ளது.

அப்போது ஈரான் பதிலடி தாக்குதல் எதையும் நடத்தவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் இப்போது மீண்டும் இந்த மோதல் தீவிரம் அடையும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதில் அணு ஆயுதங்களை பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இஸ்ரேலிய ஊடக தகவல்களின்படி, பிரதமர் நெதன்யாகு தனது அமைச்சர்களிடம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஹெஸ்பொல்லா மீதான தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *