GISBH விவகாரம்: இந்த விஷயத்தில் சமரசம் செய்தால் நான் பிரதமராக இருப்பதில் அர்த்தம் இல்லை! - அன்வார் திட்டவட்டம்
- Shan Siva
- 26 Sep, 2024
கோலாலம்பூர், செப் 26: குளோபல் இக்வான் சர்வீசஸ் அண்ட் பிசினஸ்
ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதில் தாம் எவ்வித சமரசமும் செய்யப்
போவதில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட குழுவின்
தவறான நடத்தைகளை தொடர்ந்து வெளிக்கொணர அதிகாரிகள் உறுதியாக இருப்பதாக அவர்
கூறினார். GISBH சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம், மனித கடத்தல் மற்றும் மாறுபட்ட இஸ்லாமிய
போதனைகள் ஆகியவற்றிற்காக விசாரிக்கப்படுவதால் இவ்விவகாரத்தில் தாம் உறுதியாக இருப்பதாகவும், எக்காரணம் கொண்டும் பின்வாங்கமாட்டேன்
என்றும் அவர் நேற்று இரவு மலேசியா மடானி அறிஞர்கள் மன்றத்தில் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
இந்த
விவகாரத்தில் நான் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்றால், நான் பிரதமராக இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
இஸ்லாமியக் கொள்கைகளை கடைபிடிப்பதாகக் கூறினாலும், யார் தவறு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *