தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுவசதித் திட்ட சட்ட வரைவு! சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது

top-news
FREE WEBSITE AD

 தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுவசதித் திட்ட சட்ட வரைவை பிரதமரிடம் சமர்ப்பிக்க தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய பேரணி நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தோட்டத் தொழிலாளர்கள்  சமூக ஆதரவுக் குழுவான JSML ஐச்  சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுடமை தொடர்பான சட்ட வரைவை மலேசியப் பிரதமரிடம் சமர்ப்பிக்கும் விதமாக இந்தப் பேரணி நடைபெற்றது.

இந்த வரைவுச் சட்டம் மலேசியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட  தோட்டங்களின் ஒத்துழைப்புடன் JSML ஆல் தயாரிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மலேசிய அரசாங்கம் இந்த வரைவை மலேசிய சட்டமாக மாற்றுவதற்காக நாடாளுமன்றத்திற்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இப்பேரணியின் நோக்கம் என அவர்கள் தெரிவித்தனர்,

இந்தச் சட்டத்தைக் கோரி கிட்டத்தட்ட 1000 தொழிலாளர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மலேசிய அரசாங்கத்திற்கு ஒரு மகஜரை  நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்று சமர்பித்தனர். ஆனால் இன்று வரை எந்த பதிலும் அதற்கு இல்லை. இப்போது, தாங்களே இதை வரைந்து, பல மாநில அரசாங்கங்களுக்கு இந்த வரைவைச் சமர்ப்பித்துள்ளோம் என்று அவர்கள் கூறினர்.

இந்தச் சட்ட வரைவினை இன்று சபாநாயகர் ஜொஹாரியிடம்  சமர்ப்பித்தனர்.

மலேசியா முழுவதிலும் இருந்து 100க்கும் மேற்பட்ட தோட்டங்களின் பிரதிநிதிகள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.

அதோடு PSM, ஸ்வராம் உள்ளிட்ட அரசு சாரா அமைப்புகளும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *