பிரபலங்கள் வேப்பை விளம்பரப்படுத்தத் தடை: சுகாதார அமைச்சர் எச்சரிக்கை
- Tamil Malar (Reporter)
- 09 Jan, 2026
கோலாலம்பூர், ஜன. 9-
சிகரெட், வேப் உள்ளிட்ட புகைபிடி பொருட்களின் விளம்பரம், பிரச்சாரம் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என மலேசிய சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜுல்கெப்லி அகமது தெரிவித்தார். இது பொது சுகாதாரத்திற்கான புகைபிடி பொருட்கள் கட்டுப்பாடு சட்டம் 2024 அமலில் உள்ளது, பிரபலங்கள் அல்லது வணிக உரிமையாளர்கள் உட்பட அனைவருக்கும் விதிவிலக்கு இன்றி பொருந்தும்.
அமைச்சர் கூறுகையில், பிரபலத்தன்மை சட்டத்தை மீறுவதற்கான 'டிக்கெட்' அல்ல. இது இளைஞர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், எச்சரிக்கை வழங்கப்பட்ட பின்னரே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
"அனைத்து இன்ஃப்ளூயன்சர்களும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநர்களும் சிகரெட் , வேப் பிரச்சினையை தீர்ப்பதில் பங்கு வகிக்க வேண்டும். சமுதாயத்தில் புகைபிடி கலாச்சாரத்தை இயல்பாக்குவதில் பங்களிக்கக் கூடாது," என்று அவர் இன்று தனதுமுகநூல் பதிவில் குறிப்பிட்டார்.
இந்த அறிக்கை, நகைச்சுவை நடிகர் ஷுயிப் செபாக்டு என அறியப்படும் ஷாமிரா முஹம்மது வேப் பிரச்சாரம் செய்த குற்றச்சாட்டில் 10 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளியிடப்பட்டது. இது அக்டா 852 இன் கீழ் முதல் முக்கிய வழக்கு எனக் கருதப்படுகிறது.
மலேசியா வேப் மீது முழு தடையை நோக்கி நகர்ந்து வருகிறது, இது இளைஞர்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



