தலைநகர் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு ஆபத்தா?

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 20-

தலைநகர் மஸ்ஜிட் இந்தியாவில் பல்லாண்டு காலம் ஒரு வழிபாட்டுத் தலமாக இருந்துவரும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் விரைவில் உடைக்கப்படவிருப்பதாக வெளிவந்துள்ள செய்தியால் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகள் ஏற்பட்டுள்ளன. நூற்றாண்டை தாண்டிய தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன்ஆலயம், தலைநகர் வட்டாரத்தில் உள்ள இந்தியர்களின் வழிபாட்டுத் தலமாக இருந்து வருகிறது.

இந்த ஆலயத்தை உடைப்பதற்கு தற்போது என்ன அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்திலிருந்து ஆலயத்தை அப்புறப்படுத்துவதற்கு யார் திட்டமிட்டுள்ளனர் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கோலாலம்பூரில் பெரும்பாலான ஆலயங்கள் மேம்பாட்டுத் திட்டங்களின் காரணமாக அகற்றப்பட்டு வருகின்றன. ஆனால் காலங்காலமாக இந்துக்களின் வழிபாட்டுத் தலமாக இருந்து வரும் இவ்வாலயத்தைப் பாதுகாக்க பல்வேறு தரப்பினர் போராடி வருகின்றனர்.மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் டத்தோ அம்பிகா சீனிவாசன் தலைமையில் ஒரு தரப்பினர் ஆலயத்தைக் காப்பாற்றுவதற்காகப் போராடி வருகின்றனர். இவ்வாலயத்தைக் காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அத்தரப்பினர் கூறினர்.

Kuil Devi Sri Bhadra Kaliamman di Masjid India, Kuala Lumpur, yang berusia lebih satu abad, bakal dirobohkan, mencetuskan kebimbangan dalam kalangan masyarakat India. Pelbagai pihak, termasuk bekas Presiden Majlis Peguam, Datuk Ambiga Sreenevasan, berusaha mempertahankan kuil tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *