முடிவுக்கு வருகிறதா ஈரான் ஆட்சி?". ஈரான் மக்களுக்கு நேரடி அழைப்பு!

top-news
FREE WEBSITE AD

மத்திய கிழக்கில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விடுத்துள்ள நேரடி அழைப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் மக்கள் தங்களை ஆளும் ‘பயங்கரவாத ஆட்சி’யிலிருந்து விடுவித்துக்கொள்ள இதுவே சரியான தருணம் என்று குறிப்பிட்ட அவர், பாரசீக மொழியில் ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளார்.

மேலும் வரவிருக்கும் நாட்களில் ஈரான் ஆட்சியின் ஆயிரக்கணக்கான பயங்கரவாத இலக்குகளை இஸ்ரேல் தாக்கும் என்றும், இந்தச் சூழலைப் பயன்படுத்தி ஈரானிய மக்கள் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் மக்கள் வீதிகளில் வெள்ளமெனத் திரண்டு வந்து, தங்களின் வாழ்வைக் கசப்பாக்கிய இந்த ஆட்சியைத் தூக்கியெறிய வேண்டும் என்று நெதன்யாகு கேட்டுக்கொண்டார். பாரசீகர்கள், குர்துகள், அஸெரிகள் என அனைத்து இனக்குழுக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது என்றும், இந்த வாய்ப்பு ஒரு தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் ஒரு நாட்டின் தலைவர் மற்றொரு நாட்டின் அரசை வீழ்த்த அந்நாட்டு மக்களுக்குப் பகிரங்கமாக அழைப்பு விடுப்பது ராஜதந்திர ரீதியில் மிகவும் தீவிரமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இது ஈரான் அரசுக்கு விடுக்கப்பட்ட நேரடிச் சவாலாகவே பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *