அன்வாருக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானமா?
- Muthu Kumar
- 21 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 21 -
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று தொடங்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படுமா என்பது பற்றி கருத்துரைக்க மக்களவைச் சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் நேற்று மறுத்து விட்டார்.
திங்கள்கிழமை ( இன்று) வரை காத்திருங்கள் என்று செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்தபோது ஜொஹாரி கூறினார்.எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்தும் குறிப்பாக, எதிர்க்கட்சி
உறுப்பினர்களிடமிருந்து நம்பிக்கைத் தீர்மானம் எதுவும் பெறவில்லை என்பதை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் காட்டுகிறது.
இன்று தொடங்கும் மக்களவைக் கூட்டம் ஆகஸ்டு 28ஆம் தேதியன்று வரை தொடரும். இரவு நேரத்திலும், கூட்டங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பதின்மூன்றாவது மலேசியத் திட்ட அறிக்கை இக்கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



