கோயிலை இடிக்க நிதி திரட்டுவதை நிறுத்துங்கள்! பாப்பாராய்டு எச்சரிக்கை!
- Thinagaren Sanggaren
- 01 Feb, 2026
பிப்ரவரி 1,
இந்து கோயில்களைக் குறிவைத்து இடிக்க விரும்புவர்கள் நிதி திரட்டி வரும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தும்படி சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் V Papparaidu வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் நான் தனிப்பட்ட முறையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என நினைக்கிறேன். இதைச் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் பார்வைக்கும் கொண்டு சென்றுள்ளேன். ஆனால் இப்படி சமூக நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் வகையில் கோயில்களைக் குறிவைத்து இடிக்க திட்டமிடுவதோடு அதற்காக நிதி வசூலிப்பத்தைக் கடுமையாக எச்சரிப்பதாக V Papparaidu தெரிவித்தார்.
நான் மீண்டும் சொல்கிறேன். வழிபாட்டுத் தலத்திற்கு எதிராகச் செயல்படுவதை நிறுத்துங்கள். சட்டத்தை மீறியிருக்கும் வழிபாட்டுத் தலங்களை அரசு அதிகாரிகளின் வரம்புக்குள் உள்ளது. இதில் பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் சுயலாபத்திற்காகத் தலையிடுவதை நிறுத்துங்கள். கோயில்களை இடிக்க எந்தவொரு தனி நபருக்கும், அமைப்பிற்கும் உரிமை இல்லை என்றும் கோயில்களை இடிக்க பொதுவில் நிதி வசூலிக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தும்படியும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் V Papparaidu வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



