RM 80,000 மதிப்பிலான மின்பொருள்களைத் திருடிய இருவர் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 31,

கெடா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் சம்மந்தப்பட்டதாக நம்பப்படும் இருவரைக் காவல்துறை கைது செய்திருப்பதாகக் கோலா மூடா மாவட்டக் காவல் ஆணையர் ACP Hanyan Ramlan தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இருவரும் கெடாவின் பிரபலத் திருட்டுக் கும்பலைச் சேர்ந்த GENG ALI கும்பலைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் TELEKOM MALAYSIA-வுக்குச் சொந்தமான பல்வேறு மின்பொருள்களைத் தொடர்ந்து இந்த GENG ALI கும்பல் திருடி வருவதாகவும் கோலா மூடா மாவட்டக் காவல் ஆணையர் ACP Hanyan Ramlan தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இருவரும் 24 வயது 27 வயது உள்ளூர் இளைஞர்கள் என தெரிய வந்துள்ளது, அவர்களிடமிருந்து TELEKOM MALAYSIA-வுக்குச் சொந்தமான பல்வேறு மின்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அதன் மதிப்பு RM 80,000 வரையில் இருக்கும் என கணக்கிடப்பட்டிருப்பதாகவும் கோலா மூடா மாவட்டக் காவல் ஆணையர் ACP Hanyan Ramlan தெரிவித்தார். சாலையோரங்கள் அமைந்திருக்கும் துணை மின் நிலையங்களில் உள்ள Streamyx வகையிலான மின்பொருளைத் திருடவதை இந்த GENG ALI கும்பல் வழக்கமாகக் கொண்டிருப்பதாகக் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *