மூவார் சாலை விபத்து UTHM மாணவர் மரணம்!

top-news
FREE WEBSITE AD

மூவார், பிப் 2: இங்குள்ள ஜாலான் பெல்டா மோஆகில் பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில், யூனிவர்சிட்டி துன் ஹுசைன் ஓன் மலேசியா (UTHM) பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்தார். அவர் பயணித்த காரில் மேலும் நான்கு நண்பர்கள் இருந்தனர்.

இந்த மாணவர்கள், செகமாட் மாவட்டத்தின் லாபிஸ் பகுதியிலிருந்து, பாகோவில் உள்ள UTHM வளாகத்துக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.
விபத்து  மதியம் சுமார் 1 மணியளவில் நடந்துள்ளது. அப்போது, அவர்கள் பயணித்த ஹோண்டா அகோர்ட் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது பக்கமாகச் சறுக்கியது என்று முவார் காவல் துறை தலைவர் ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அசீஸ் கூறினார்.

காரின் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த அமீர் ஃபைசல் ஹஸ்ரோல்நிசாம் (21) என்பவர், தலையில் கடுமையான காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று அவர்  பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

இந்த விபத்தில் தமீர் அமீர் முக்சானி ஆரிஸ் (21) என்பவர் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்
அமீர் இக்வான் அக்மட் நூருல் லயில், ஐமான் மூசா, ஹகிமி ஹிஷ்யாமுத்தீன் (அனைவரும் 21 வயது) ஆகிய மூவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அனைவரும் தற்போது செகமாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த அமீர் ஃபைசலின் உடல், உடற்கூறு ஆய்வுக்காக சுல்தானா ஃபாத்திமா சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு 1987 சாலை போக்குவரத்து சட்டம் பிரிவு 41(1) கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் காவல் துறை தலைவர் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *