தாய்லாந்து வெள்ளத்தில் தவித்த UUM மாணவர்கள் மீட்பு!
- Shan Siva
- 27 Nov, 2025
கோலாலம்பூர், நவ 27: தாய்லாந்தின் ஹட்யாய் வெள்ளத்தில் சிக்கித் தவித்த வட
மலேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முப்பத்தாறு மாணவர்களும், இரண்டு விரிவுரையாளர்களும் மீட்கப்பட்டதாக உயர்கல்வி
அமைச்சர் சாம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்தார்.
அந்தக் குழு
தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும், வீடு திரும்புவதற்கு முன்பு அவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் வழங்கப்படும்
என்றும் அவர் கூறினார்.
இந்த மீட்பு
நடவடிக்கை பாதுகாப்பாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும் மேற்கொள்ளப்படுவதை
உறுதிசெய்ய உதவிய வெளியுறவு அமைச்சு, தாய்லாந்தில்
உள்ள மலேசியத் தூதரகம், சோங்க்லாவில்
உள்ள மலேசிய துணைத் தூதரகம், தாய் அதிகாரிகள்,
உள்ளூர் மீட்புக் குழுக்கள் மற்றும் UUM
நிர்வாகத்திற்கு ஆழ்ந்த பாராட்டுகளையும்
நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



