வியாழன் : 8 மே, 2025
2 : 20 : 04 PM
முக்கிய செய்தி

போதைப்பொருள் விற்பனை செய்த தம்பதியர் கைது!

top-news

மார்ச் 24,

எரிவாயு நிலையத்தில் போதைப்பொருள் விற்பனை செய்த இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகப் பேராக் மாநிலக் காவல்துறை தலைவர் DATUK NOOR HISAM NORDIN தெரிவித்தார். நண்பகல் 2.30 மணிக்கு ஈப்போவில் உள்ள TAMAN CANNING பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட 30 வயது ஆடவரும் 29 வயது பெண்ணும் கணவன் மனைவி என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு 11 லட்சம் ரிங்கிட் என கணக்கிடப்பட்டிருப்பதாகப் பேராக் மாநிலக் காவல்துறை தலைவர் DATUK NOOR HISAM NORDIN தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 29 வயது பெண் BENZODIAZEPINE எனும் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sepasang suami isteri ditahan polis di sebuah stesen minyak di Ipoh kerana menjual dadah bernilai RM1.1 juta. Ujian saringan mengesahkan wanita berusia 29 tahun positif benzodiazepine. Kes disiasat oleh Polis Perak untuk tindakan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *