சாலை நடுவே படுத்திருந்த முதலை- உயிர் தப்பிய தம்பதி

top-news

செய்தி - வெற்றி மைந்தன்

மலாக்கா, நவ. 25-

டுயோங் பகுதியில் உள்ள எம்பாங்கான் 25 அணைக்கு அருகே நேற்று இரவு 9 மணியளவில், மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியர் , சாலை நடுவே படுத்திருந்த பெரிய முதலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக முதலையைக் கண்டு மோட்டாரை நிறுத்தியதால் உயிர் தப்பியதாக அத்தம்பதியினர் தெரிவித்தனர்.

சித்தி ஹஸ்னியாவும் அவரது கணவர் யுஸ்மாலிசாய் மாட் ஜூசோ (43) தமது மகளைப் பார்க்கச் சென்று, இரவு தாமான் ஸ்ரீ கந்தாங்கில் உள்ள வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். கனமழை காரணமாக அவர்கள் கிராமவாசிகள் வழக்கமாகப் பயன்படுத்தும் குறுக்கு வழியில் வீடு திரும்ப முற்பட்டனர்.

“பெருமழை பெய்து கொண்டிருந்தது. கணவர் வேகமாகவே வந்து கொண்டிருந்தார். அணைக்கு அருகே உள்ள பாலத்தை அடைந்ததும், திடீரென ப்ரேக் அழுத்தினார். ‘முதலை! முதலை!’ என்று கத்தினார். முன்னால் பார்த்தால், சாலை நடுவே பெரிய முதலை படுத்திருந்தது!” என்று நினைவு கூர்ந்தார் சித்தி ஹஸ்னியா.

மோட்டார் சைக்கிள் சற்று தள்ளி நின்றதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது. முதலை சில நிமிடங்கள் அசைவின்றி படுத்திருந்த பின்னர் மெதுவாக அருகிலுள்ள நீர்நிலை நோக்கி ஊர்ந்து சென்றது. அதன் பின்னரே பயந்து போன தம்பதியர் வீட்டுக்குத் திரும்பினர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *