மனைவியைத் தாக்கிய கணவருக்குச் சிறையும் RM 6,000 அபராதமும்!
- Thinagaren Sanggaren
- 11 Jul, 2025
ஜூலை 11,
மனைவியைக் கோபத்தில் தாக்கியதாக நம்பப்படும் 36 வயதான ஆடவருக்கு
இன்று Ayer Keroh Majistret நீதிமன்றம் ஒரு நாள் சிறையும் RM 6,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. குற்றம்
சாட்டப்பட்ட 36 வயதான See Yong Fei எனும் ஆடவர்
தன் மீதானக் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில் அவரின் குடும்பச் சூழலைக் கருத்தில்
கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக Ayer Keroh Majistret நீதிமன்ற நீதிபதி
Sharda Sheinha Suleiman தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு மே 7 ஆம் திகதி
முன் அறிவிப்பின்றி காய்கறிகளை வாங்க கடைக்குச் சென்றதால் தன் மனைவியைத் தாக்கியதாக
நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்ட 39 வயது பெண்ணுக்கு உடலில் பல்வேறு காயங்களும் எலும்பு
முறிவும் ஏற்பட்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் காவல்
நிலையத்தில் புகார் அளித்த நிலையில் மேல் முறையீடு செய்யாததால் குறைந்தபட்சத் தண்டனையை வழங்கியிருப்பதாக Ayer Keroh Majistret நீதிமன்ற நீதிபதி
Sharda Sheinha Suleiman தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



