திடீரென தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்!
- Muthu Kumar
- 20 Feb, 2026
3 முறை தமிழக முதலமைச்சராக இருந்தவரும், மறைந்த ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தலைவராக இருந்தவருமான ஓபிஎஸ் இப்போது அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ் இன்னும் தனது தேர்தல் நிலைப்பாட்டையோ அல்லது கூட்டணி தொடர்பான முடிவையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவரது ஆதரவாளர்களில் சிலர் மீண்டும் அதிமுகவில் இணைந்துவிட்டனர், சிலர் திமுகவிற்கும், வேறு சிலர் தவெகவுக்கும் சென்றுவிட்டனர். ஓபிஎஸ்-ன் அரசியல் ஆதரவாளராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரனும் எம்ஜிஆர் அதிமுக என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துவிட்டார்.. இதனால் ஓபிஎஸ்-ன் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது..
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.. அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார். இன்றுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில் இன்று ஓபிஎஸ் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது, இருந்தாலும் முதலமைச்சரை ஓபிஎஸ்-ஐ சந்தித்ததற்கான காரணம் வெளியாகவில்லை..
திமுக உடன் இணைந்து ஓபிஎஸ் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறாரா? அல்லது தனிக்கட்சியை தொடங்கப் போகிறாரா? அல்லது தவெக உடன் கூட்டணி அமைப்பாரா? என்பது தெரியவில்லை.தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படப் போகும் மாற்றத்திற்கான முன்னோட்டமாக இந்த சந்திப்பு நடந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



