சுக்மாவில் சிலம்பம் இடம்பெற அமைச்சரவையில் குரல் கொடுப்பேன்! – கோபிந்த் சிங் உறுதி!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 8,

சிலங்கூரில் நடைபெறவிருக்கும் சுக்மாவில் சிலம்பப் போட்டி இல்லாததால் பெரும்பாலான இந்தியர்கள் அதிருப்தியில் இருப்பதைத் தாம் உணர்ந்திருப்பதாகவும் சுக்மாவில் சிலம்பம் இடம்பெற செய்வதற்காக அமைச்சரவையில் இது குறித்து விவாதிப்பதாகவும் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ உறுதியளித்தார். இது தொடர்பாக இளைஞர் விளையாட்டு அமைச்சின் அமைச்சர் ஹன்னா இயோவிடம் கலந்தாலோசித்ததாகவும் அதனை அடுத்து சுக்மாவை ஏற்று நடத்தும் சிலாங்கூர் மாநில அரசிடமும் சிலாங்கூர் மெந்திரி பெசாரிடமும் கலந்தாலோசித்ததாக டி.ஏ.பி தலைவருமான கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார். 

இது இந்தியர்களின் உணர்வு தொடர்பானது என்பதை அமைச்சர் ஹன்னா இயோவும் மெந்திரி பெசார் அமிருடின் ஷாரியும் அறிந்திருப்பதாகவும் இது குறித்து விதிகளுக்குற்பட்டு சிலம்பப் போட்டியைச் சுக்மாவில் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார். அமைச்சரவையிலும் இது குறித்தான விவாதங்கள் இடம்பெறும் என கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *