போலியான செய்திகள் வெளியிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! மாமன்னர்!

top-news

ஜூலை 10,


மாட்சிமை தாங்கிய மாமன்னர் Sultan Ibrahim Sultan Iskandar உருவப்படத்தைக் கொண்டு வெளியிடப்பட்ட ஒரு காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியது தொடர்பாக அது போலியான காணொலி என மாமன்னரின் அலுவலம் இன்று விளக்கமளித்துள்ளது. Ai மூலமாக அக்காணொலி வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்து ஏதும் மாமன்னரின் கருத்துகளாகக் கருதவேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சம்மந்தப்பட்ட காணொலியில் மாட்சிமை தாங்கிய மாமன்னர் Sultan Ibrahim Sultan Iskandar முதலீட்டு நிறுவனத்திற்கு ஆதரவளிக்கும்படியாக அமைந்திருப்பதை மாமன்னர் அலுவலகம் மறுத்தது. மாட்சிமை தாங்கிய மாமன்னர் Sultan Ibrahim Sultan Iskandar எந்தவொரு முதலீடு நிறுவனத்திற்கும் ஆதரவாகவோ மக்களைப் பயன்படுத்திக் கொள்ளும்படியான எந்தவொரு முதலீட்டுடனும் தொடர்பில் இல்லை என்றும், சம்மந்தப்பட்ட போலி காணொலிக்கு எதிராகக் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Pejabat Sultan Ibrahim Sultan Iskandar menegaskan video tular di media sosial yang kononnya menyokong pelaburan adalah palsu dan dihasilkan melalui AI. Baginda menuntut pihak berkuasa mengambil tindakan tegas terhadap penyebar berita palsu yang mencemarkan nama baik baginda.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *