போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கணவன் மனைவியுடன் தோழியும் கைது!
- Thinagaren Sanggaren
- 12 Sep, 2025
செப்டம்பர் 12,
ஜொகூர் கோத்தா திங்கியில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்பட்ட இரு பெண்களை ஆடவர் ஒருவரையும் கைது செய்த நிலையில் அவர்கள் மூவரும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் 43 வயது Muhammad Fairul Jaafar என்றும் 33 வயது Elika Safitri என்றும் இருவரும் கணவன் மனைவி என்பதும், மற்றொரு பெண் 39 வயது NurSahkila எனும் பெண் கணவனின் பெண் தோழி என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த செப்டம்பர்
2, ஜொகூர் கோத்தா
திங்கி Taman Sri Penawar குடியிருப்புப் பகுதியில் இரவு 10.30 மணிக்குச் சந்தேகத்திற்குரிய ஒரு வீட்டைச் சோதனையிட்டதில் 80,330 gram எடையிலான Methamphetamine வகை போதைப்பொருளுடன் அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும்நிலையில் கைது செய்யப்பட்ட மூவரையும் மேலதிக
விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்கும்படியும் அடுத்த மாதம் அக்டோபர் 13 நீதிமன்ற
விசாரணை தொடர்வதாகவும் Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



