பகாங் ஆற்றில் மூழ்கி ஆடவர் பலி! நீர்நிலைகளிலிருந்து விலகியிருங்கள்! - பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
- Thinagaren Sanggaren
- 21 Sep, 2025
செப்டம்பர் 21,
பகாங் ஆற்றில் தவறி விழுந்த ஆடவர் ஒருவர் 14 மணிநேரத் தேடுதலுக்குப் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார். பகாங் ஆற்றின் கரையில் நேற்று மாலை 6 மணியளவில் குடும்பத்துடன் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது 45 வயது Mohd Zainuren எனும் ஆடவர் தவறி விழுந்ததாக நம்பப்படுகிறது. நேற்று இரவு 7 மணிமுதல் மீட்பு அதிகாரிகளுடன் பொதுமக்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டதாகப் பகாங் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Wan Samsul Effendi தெரிவித்தார்.
இன்று காலை 8 மணிக்கு அவர் விழுந்த இடத்திலிருந்து
3 கிலோ மீட்டர் தூரத்தில் அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக பகாங் மாநில மீட்பு ஆணைய
உதவி இயக்குநர் Wan Samsul Effendi தெரிவித்தார். அவர் குடும்பத்தினர் அவரின்
உடலை அடையாளம் கண்டிருப்பதாகவும் பிரேதப் பரிசோதனைக்காக அவரின் உடல் பெக்கான் மருத்துவமனைக்குக்
கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும் பகாங் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Wan
Samsul Effendi தெரிவித்தார். தற்போதை வானிலை நீர் நிலை நடவடிக்கைகளுக்கு
ஏற்ப இல்லாததால் பாதுகாப்பற்ற சூழலில் நீர்நிலைகளில்
இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என பகாங் மாநில மீட்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



