சூடு பிடிக்கும் சுங்கை பக்காப் தேர்தல் களம்! அரிமா சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று விருந்துபசரிப்பு! 40 NGO - முதல்வர்கள் - அமைச்சர்கள் பங்கேற்கும் மாபெரும் ஒன்றுகூடல்!

- Shan Siva
- 30 Jun, 2024
( தி.ஆர்.மேத்தியூஸ்)
சுங்கை பக்காப் , ஜூன் 30: தென் செபராங் பிறை, சுங்கை பக்காப் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள சிம்பாங் அம்பாட், தாமான் புத்ரி குனோங் இந்திய மக்களுடன், அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் மலேசிய அரிமா சங்கத்தின் ஏற்பாட்டிலான ஒன்றுகூடல் நிகழ்வு மற்றும் திருவிழா சாப்பாடு விருந்துபசரிப்பு இன்று காலை 10.30 மணி முதல் - இரவு 11.30 மணி வரை தாமான் புத்ரி குனோங் திடல் 2 -ல் நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் 40 அரசுசாரா அமைப்புகள் கலந்துகொள்வதோடு செய்தியாளர்கள் சந்திப்பும் நடைபெறும்.
விருந்துபசரிபோடு இரவு 11 30 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில், மாநில முதல்வர்கள், அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிகழ்வில் காலை 11 மணி முதல் 11.40 வரை 40 அரசுசாரா அமைப்புகள் கலந்துக் கொள்ளும் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும்.
நண்பகல் 11.30 மணியிலிருந்து பிற்பகல் 2. 30 மணி வரையில் செய்தியாளர்களுடன், தாமான் புத்ரி குனோங் வாக்காளர்கள் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் ஆதரவாளர்கள் கலந்து கொள்ளும் திருவிழா சாப்பாடு நல்லெண்ண விருந்துபசரிப்பும் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
அதன் பின்னர் மாலை 6.00 மணி தொடங்கி இரவு 11.30 மணி வரையில் நடைபெறவிருக்கும் இரவு நிகழ்வுகளில், பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ளும் ஒற்றுமை பிரச்சார உரைகளுடன், பலவகையான கலாச்சார, பண்பாட்டு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வில் மலேசிய அரிமா சங்கத்தின் தேசியத் தலைவரும், ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன், சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, பினாங்கு மாநிலத் துணை முதல்வர் டாக்டர் முகமட் அப்துல் ஹமீட், பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு, ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி உறுப்பினர், நிபோங் தெபால் நாடாளுமன்ற உறுப்பினர் ஃ பட்லினா சிடேக், சுங்கை பாக்காப் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் ஜொஹாரி, நிபோங் தெபால் நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன் மற்றும் அரசியல் தலைவர்கள், பிரமுகர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.
மேலும் சுங்கை பக்காப் சட்டமன்றத் தொகுதியில் வசிக்கும் இந்திய மக்கள் எதிர்நோக்கி வரும் கல்வி, பொருளாதாரம், சமூக நலன், தமிழ்ப்பள்ளி மற்றும் அடிப்படைப் பிரச்சினைகள் ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தி, சிறந்த முறையில் தீர்வு கண்டிருக்கும் கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன் இந்நிகழ்வை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தி வருகிறார்.
இந்திய மக்களுக்காக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்வில் பக்காத்தான் ஹராப்பான் ஆதரவாளர்கள், சுற்று வட்டார பொதுமக்கள், அன்பு வாக்காளர்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து சிறப்பிக்குமாறு நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் தியாகராஜ் சங்கரநாராயணன் கேட்டுக் கொள்கிறார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *