பள்ளிக்கூட மசூதியை மோதிய கார்! இரு பெண்கள் பலி! – பாசீர் பூத்தே!
- THINAGAREN SANGGAREN
- 05 Jul, 2026
ஜூலை 5,
இன்று காலை கட்டுப்பாட்டை இழந்த வாகனம் புக்கிட் ஜாவா 2 ஆரம்பப்பள்ளியின் மசூதியில் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் இருந்த 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் Pasir Puteh Tengku Anis மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று காலை 6.34 மணிக்குப் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டதாக Pasir Puteh மாவட்ட மீட்பு ஆணையர் Azhar Elmi தெரிவித்தார்.
உயிரிழந்த இருவரும் 30 வயது, 50 வயதுள்ள இந்தோனேசிய பெண்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வாகனத்தைச் செலுத்தியதாக நம்பப்படும் ஓட்டுநருடன் மேலும் நால்வர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் சிகிச்சைக்குப் பின்னர் மேலதிக விசாரணையைத் தொடர்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தின் காணொலிகள் சமூகவலைத்தலங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



