போராட்டத்தில் காவல் அதிகாரியின் மண்டையை உடைத்த கலவரக்காரர்கள்! கோலாலம்பூரில் பரபரப்பு!
- Thinagaren Sanggaren
- 11 Sep, 2025
செப்டம்பர் 11,
கோலாலம்பூர் Kampung Sungai Baru குடியிருப்புப் பகுதியில் பொதுமக்களின் போராட்டம் கலவரமாக மாறியதில் Dang Wangi, மாவட்டக் காவல் துறை தலைவர் Suzilme Affendy Sulaiman தாக்கப்பட்டார். பொதுமக்களின் போராட்டம் கலவரமாக மாறியதும் கூட்டத்தைக் கட்டுப்படுத்திய போது கூட்டத்திலிருந்து எறியப்பட்ட கல், Dang Wangi, மாவட்டக் காவல் துறை தலைவர் Suzilme Affendy Sulaiman தலையில் பட்டதாக நம்பப்படுகிறது. Dang Wangi, மாவட்டக் காவல் துறை தலைவர் Suzilme Affendy Sulaiman தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே முதலுதவிகள் வழங்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்ட போது இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் தொடர்ந்து கற்களையும் பொருள்களையும் எறிந்த கலவரக்காரர்களில் சிலரைக் காவல் அதிகாரிகள் கைது செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேம்பாட்டு நிறுவனம் கோலாலம்பூர் Kampung Sungai Baru குடியிருப்புப் பகுதியில் கட்டுமானத்தை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்திருந்த நிலையில் புறநகர் பகுதியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த குடிமக்கள் நிலத்தை நிறுவனத்திடம் வழங்க மறுத்ததால் கோலாலம்பூர் Kampung Sungai Baru குடியிருப்புப் பகுதிக்கான நீர் வசதியையும் மின்சார வசதியும் தடை செய்யப்பட்டது. இது தொடர்பாக இன்று காலை கோலாலம்பூர் Kampung Sungai Baru குடியிருப்புவாசிகள் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டம் முறையான அனுமதி பெற்று நடத்தப்படவில்லை என்றாலும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் போராட்டத்தின் ஒரு பகுதியினர் காவல் அதிகாரிகளைத் தாக்கியதால் போராட்டம் கலவரமாக மாறியதாகவும் தெரிய வந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



