பதவியை ராஜினாமா செய்கிறாரா அஸ்மின் அலி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 26: சிலாங்கூர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக வெளியான ஊகங்களை உலு கிள்ளான்  சட்டமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி மறுத்துள்ளார்.

அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பதவி விலக விரும்புவதாகக் கூறி, சிலாங்கூர் பெரிகாத்தான் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு நேற்றுமுன் தினம் இரவு அஸ்மின் வாட்ஸ்அப் செய்தியை அனுப்பியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, இது பரபரப்பை ஏற்படுத்தியது.

வரவிருக்கும் மாநில சட்டமன்றக் கூட்டத்திற்கு முன்னதாக புதிய எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பது குறித்து விவாதிக்க 21 பெரிக்காத்தான் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர்களை இந்தச் செய்தி வலியுறுத்தும் வகையில் அந்தச் செய்தி இருந்தது.

இந்த விவகாரம் குறித்து மேலும் விவாதிக்கப்பட வேண்டும் என்று பாஸ் கட்சியின் பயா ஜராஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹலிம் தமுரி உட்பட பல  பெரிக்காத்தான் சட்டமன்ற உறுப்பினர்களின் எதிர்வினைகளைத் தொடர்ந்து அந்த செய்தி சம்பந்தப்பட்ட ஊடகத்தில் இருந்து நீக்கப்பட்டதாகாத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க  அவசரக் கூட்டம் கூட்டப்பட்டதாகவும் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, அந்தச் செய்து உண்மை இல்லை என்றும்,  வதந்திகளை நிறுத்துமாறும் அஸ்மின் கூறியதாக   எஃப்எம்டி தெரிவித்துள்ளது.

தாம் எப்போதும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், மக்களுக்கு உதவ  தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும் அஸ்மின் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூரில் பணியாற்றுவதில் தாம் நன்றியுள்ளவனாக இருப்பதாகவும்,   பெர்சாத்து மற்றும் பாஸ் இடையேயான ஒத்துழைப்பும் பிணைப்பும் மிகவும் வலுவாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து தங்களால் முடிந்ததைச் செய்வோம், மீதமுள்ளதை அல்லாஹ்விடம் விட்டுவிடுகிறோம்  என்று பெர்சத்து பொதுச் செயலாளருமான அவர் மேலும் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *