டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக சைப் ஹசனின் மாபெரும் சாதனை

top-news

துபாய், செப். 25-

செய்தி-வெற்றி மைந்தன்

துபாயில் நடைபெற்று வரும் 17-ஆவது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேச வீரர் சைப் ஹசன் மாபெரும் சாதனை படைத்தார். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதி வருகின்றன. இதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்தியாவும் வங்காளதேசமும் மோதிய ஆட்டத்தில்  டாஸ் வென்ற வங்காளதேசத்தின் பொறுப்பு கேப்டன் ஜேக்கர் அலி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது. அபிஷேக் சர்மா 75 ரன்களுடன் அதிகபட்சமாக விளங்கினார். வங்காளதேசத்தின் சுழற்பந்து வீச்சாளர் ரிசாத் ஹூசைன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

169 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணியில், தொடக்க வீரர் சைப் ஹசன் நிலைத்து ஆடினார். அக்‌ஷர் படேலின் சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு 5 சிக்சர்களுடன் 69 ரன்கள் (51 பந்துகள், 3 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்து அசத்தினார். ஆனால், மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால், அணி 19.3 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *