சிறுமி பாலியல் வன்புணர்வு! பாக்கிஸ்தானிய தொழிலாளர் கைது!

top-news

ஜூலை 4,


மலாக்கா ஜாசினில் 10 சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக நம்பப்படும் 39 வயதானப் பாக்கிஸ்தானிய தொழிலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி பள்ளியில் உள்ள ஆசிரியரிடம் இது குறித்த நிலையில் சம்மந்தப்பட்ட ஆசிரியர் அச்சுறுமியுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் சம்மந்தப்பட்ட 39 வயது பாக்கிஸ்தானிய ஆடவரைக் காவல்துறை செய்ததாகவும் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் 54 வயது தாயார் சம்மந்தப்பட்ட பாக்கிஸ்தானிய ஆடவருடன் ஒரே வீட்டில் தங்கியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் முதலே 10 வயதான சிறுமிக்கு அவ்வாடவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததைக் காவல்துறையினர் கண்டறிந்த நிலையில் 54 வயது தாயாரையும் விசாரத்து வருவதாகவும் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட 39 வயது பாக்கிஸ்தானிய ஆடவர் இன்று முதல் 5 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கும்படியும் JASIN Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி ஜாசின் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Seorang pekerja warga Pakistan berusia 39 tahun ditahan di Jasin, Melaka kerana disyaki mencabul seorang kanak-kanak perempuan berusia 10 tahun sejak Februari. Mangsa tinggal serumah dengan suspek. Ibu mangsa dan suspek kini disiasat polis.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *