கல்வி நிறுவனங்களை ‘ஊழல் மையம்’ என குற்றம்சாட்டுவது நியாயமல்ல – சம்ரி அப்துல் காடிர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப். 7-

நாட்டின் உயர்கல்வி நிறுவனங்கள் (IPT) ‘ஊழலின் மையமாக’ சித்தரிக்கப்படுவது நியாயமற்ற குற்றச்சாட்டு என உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர் தெரிவித்துள்ளார்.

நேற்று வெளியான ஒரு நாளிதழ் மற்றும் அதன் இணையதளத்தில் இடம்பெற்ற செய்தியைக் குறிப்பிட்டு அவர் கூறுகையில், “IPT-களை ‘ஊழலின் களமாக’ வர்ணிப்பது மிகையாகும். அந்த தலைப்பை வெளியிட்ட ஆசிரியர்கள் மீண்டும் பரிசீலிக்க வேண்டும்,” என்றார்.

இன்று இங்கு நடைபெற்ற பொதுத்-தனியார் ஆராய்ச்சி வலையமைப்பு (PPRN) மாநாட்டை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்வில் துணை அமைச்சர் அடாம் அட்லி அப்துல் ஹாலிம் மற்றும் உயர்கல்வித் துறை இயக்குநர் ஜெனரல் பேராசிரியர் டத்தோ டாக்டர் அஸ்லிந்தா அஸ்மான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அந்த செய்தியில், நேர்மை மற்றும் ஒழுக்கத்தை உருவாக்க வேண்டிய கல்வி அமைப்புகளே தற்போது ஊழல் பரவுகின்ற இடமாக மாறிவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கல்வித் துறையின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும் இத்தகைய பொதுமைப்படுத்தல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என சம்ரி வலியுறுத்தினார்.

மேலும், உயர்கல்வி துறையில் நேர்மை மற்றும் பொறுப்புணர்வை வலுப்படுத்த அமைச்சு தொடர்ந்து பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *