பன்மொழி கற்றல் நாட்டிற்கு பலன் தரும் – பிரதமர்
- Surendran Sumdraraj
- 26 Feb, 2026
ஸ்ரீ கெம்பாங்கான், பிப். 26-
மலாய் மொழி மட்டுமல்லாது, பிற மொழிகளையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள இடமளிப்பது நாட்டிற்கு நன்மை பயக்கும் நடவடிக்கையாகும் என்று பிரதமர் தெரிவித்தார்.
மலாய் மொழியின் வலுவான அறிவு முதன்மையாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றமில்லை என்றாலும், சீனம் போன்ற பிற மொழிகளின் அறிவும் பொருளாதாரம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் முக்கியத்துவம் பெறுகிறது என்று அவர் கூறினார். உலகளாவிய வர்த்தக சூழலில் பல்மொழித் திறன் கொண்ட மனித வளம் நாட்டிற்கு போட்டித்திறன் அளிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“சுதந்திரமான, இறையாண்மை கொண்ட, ஜனநாயக நாடான மலேசியாவில், பிற மொழிகளின் வளர்ச்சிக்கு இடமளிப்பது நஷ்டமல்ல; அது நன்மை தரும். ஆனால், அனைவரும் மலாய் மொழியின் அரசியல் மற்றும் அரசமைப்பு நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், மலேசியாவில் வாழும் ஒவ்வொருவரும் நாட்டின் வரலாறையும், தேசிய அடையாளத்தையும் புரிந்துகொள்வது அவசியம் என்றும், அதற்காக தேசிய மொழியை கற்றுக்கொள்ள வேண்டியது கடமை என்றும் பிரதமர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



